--- --:--:-- --

சீனாவில் 24 வகையான கொரொனா வைரஸ்கள் கண்டுபிடிப்பு..!

7

சீனாவில் கொரோனா வைரசின் தோற்றம் பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் 24 வகையான வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சீனாவில் வௌவால் வைரஸ்கள் பற்றிச் சாங்க்டோ மருத்துவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சீவைபம் என்பவர் தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.

 

அந்த ஆய்வின் முடிவில் தென் மேற்கு சீனாவில் 4 கிலோ மீட்டர் கொண்ட குறைந்தளவு பகுதிக்குள் இதற்கு முன்பு அறியப்படாத 24 வகையான வௌவால் கொரொனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது.

 

அவற்றில் 4 வைரஸ்கள் உலக நாடுகளில் பெருந்தொற்றை ஏற்படுத்தியுள்ள கொரோனவைரசுடன் தொடர்பு உடையவை என்றும் அவற்றில் ஒரு வைரஸ் ஆனது கொரோனவைரஸ் மரபணுவை சுமந்து இருந்தது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon