இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் பட்டியல் ரிலீஸ்! திருப்பூர் வடக்கில் ரவி போட்டி!!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் வடக்கு தொகுதியில் ரவி போட்டியிடுகிறார்.
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ளது. அவர்களின் விவரம் வருமாறு:
1. திருத்துறைப்பூண்டி – மாரிமுத்து
2. தளி – டி.ராமச்சந்திரன்
3. பவானிசாகர் – பி.எஸ்.சுந்தரம்
4. திருப்பூர் வடக்கு – ரவி
5 வால்பாறை – எம்,ஆறுமுகம்
6. சிவகங்கை – எஸ்.குணசேகரன்
இதன் மூலம் திருப்பூர் வடக்கு தொகுதியில், ‘சிட்டிங்’ எம்.எல்.ஏ., விஜயகுமார், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளராக இருக்கும் ரவி இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இதுதவிர ம.தி.மு.க.,வில் இிருந்து, கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சிக்கு தாவிய சிவபாலனும் களத்தில் உள்ளார்.
தற்போது தொகுதி அ.தி.மு.க வசம் இருந்தாலும், தி.மு.க கூட்டணியும் ஈடுகொடுத்து பிரசாரம் செய்ய ஆரம்பித்திருக்கிறது. திருப்பூர் வடக்கு தொகுதியில் அ.ம.மு.க சார்பில், மாவட்ட செயலாளர் ஈஸ்வரனும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எஸ்.ஈஸ்வரன் ஆகியோரும் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




