திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க மற்றும் வைர நகைகள் பறிமுதல்..!
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற வாகன சோதனையில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன .திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள சோதனைச்சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சிறிய ரக காரின் டயர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதைப் போன்று மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 14 சோதனைச் சாவடிகள் நேற்றிரவு நடத்தப்பட்ட வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டது. சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான 65 கிலோ மதிப்புள்ள தங்க மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





