--- --:--:-- --

மதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு… பல்லடத்தில் முத்துரத்தினம் போட்டி!!

vaiko 02

திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்கள் 6 பேரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பல்லடத்தில் முத்துரத்தினம் நிறுத்தப்பட்டுள்ளார்.

 

திமுக கூட்டணியில், கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னமும் மார்க்சிஸ்ட் கட்சியுடன் மட்டும்தான் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த சூழலில், மதிமுக சார்பில் போட்டியிடும் 6 வேட்பாளர்களின் பட்டியலை மதிமுக இன்று வெளியிட்டுள்ளது.

 

அதன்படி, மதுராந்தகம் – மல்லை சத்யா, சாத்தூர் – ரகுராமன், வாசுதேவநல்லூர் – சதன் திருமலைக்குமார், பல்லடம் – முத்துரத்தினம், அரியலூர் – சின்னப்பா, மதுரை தெற்கு – பூமிநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

 

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதி பட்டியலை, அதன் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். அதன்படி, வானூர் (தனி), காட்டுமன்னார்கோவில் (தனி), செய்யூர் (தனி), அரக்கோணம் (தனி), நாகை, திருப்போரூர் ஆகிய தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon