ஏரியில் மகன் மற்றும் மகளுடன் தந்தை விழுந்து உயிரிழந்த சம்பவம்..!
செம்பரம்பாக்கம் ஏரியில் மகன் மற்றும் மகளுடன் தந்தை விழுந்து உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புது வட்டாரத்தை சேர்ந்த உஸ்மான் என்பவர் தனது 11 வயதுடைய மகள் மற்றும் 7 வயதுடைய மகனுடன் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வந்துள்ளனர்.
இவர்கள் மூவரும் ஏரிக்குள் விழுந்து விட்டதை கண்டு அங்கிருந்தவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றுள்ளனர். உயிரிழந்த நிலையில் உஸ்மானி உடல் முதலில் மீட்கப்பட்ட நிலையில் நான்கு மணி நேர தேடுதலுக்கு பின்னர் நீரில் மூழ்கிய சிறுவர்களின் உடல்களை தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் ஏரியில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






