--- --:--:-- --

தாய் வைத்திருந்த விஷம் கலந்து ஐஸ் கிரீமை தவறுதலாக உண்ட மகன் மற்றும் சகோதரி.!

1

கேரள மாநிலத்தில் தாய் வைத்திருந்த விஷம் கலந்து ஐஸ் கிரீமை தவறுதலாக உண்ட 5 வயது மகன் பலியானதை தொடர்ந்து தாயின் சகோதரியும் பலியானதால் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் வர்ஷா. 25 வயதாகும் வர்ஷாவிற்கு திருமண வாழ்வில் 5 வயதில் ஒரு மகன் உள்ளார். காலையில் காசியிலுள்ள கண்ஹங்கட் பகுதியில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு மகனை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார் வர்ஷா.

 

கடந்த 11ஆம் தேதி இரவு தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஐஸ்க்ரீம் ஒன்றை வாங்கி அதில் எலி மருந்தை கலந்துள்ளார் வர்ஷா. அதனை உட்கொண்ட வார்சாவிற்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமது அறைக்கு சென்று படுத்து விட்டார்கள்.

 

ஆனால் மீதம் இருந்த எலி மருந்து கலந்த ஐஸ்கிரீமை குப்பையில் போட மறந்து விட்டுள்ளார். இதனை தொடர்ந்து 15 வயது மகன் வயது பத்தொன்பது வயது தங்கை த்ரிஷாவும், வர்ஷா மீதம் வைத்து இருந்த ஐஸ்கிரீமை கண்டு ஆசையுடன் சாப்பிட்டுள்ளனர்.தொடர்ந்து பிரியாணி ஆர்டர் செய்த அவர்கள் அதனை உண்டு விட்டு உறங்க சென்றுள்ளனர்.

 

திடீரென இரவு வர்ஷாவின் மகன் கடுமையாக வாந்தி எடுக்க தொடங்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இரவோடு இரவாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 

மகன் இறந்த உடன் திரிஷாவிற்கு உடல்நலம் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் வர்ஷாவின் குடும்பத்தினர் திரிஷாவை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஒரு வார காலம் கடுமையான சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் கடந்த புதனன்று அவர் உயிரிழந்துள்ளார்.

 

விஷம் கலந்த ஐஸ்கிரீம் உண்ட பிறகும் தனக்கு எந்த பாதிப்பும் ஆகாததால் தன்னுடைய தற்கொலை முயற்சியை பற்றிய குடும்பத்திலுள்ளவர்களிடம் மறைத்துள்ளார் வர்ஷா. குடும்பத்தில் இருப்பவர்களும் சிறுவன் மற்றும் திரிஷா சாப்பிட்ட பிரியாணியில் தான் ஏதோ கோளாறு என்று நினைத்துள்ளனர்.

 

அதை தொடர்ந்து வர்ஷாவின் உறவினர் போலீசில் புகார் அளித்துள்ளார். விசாரணையில் வர்ஷா மீதம் வைத்த எலி மருந்து கலந்த ஐஸ்கிரீமை அனைத்தும் திரிஷா உண்டு உள்ளது தெரியவந்தது. இதனையடுத்து காசர்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon