பத்து ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் இளம் மருத்துவர்..!
கிருஷ்ணகிரி அருகே பத்து ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் இளம் மருத்துவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பள்ளியில் மருத்துவமனை நடத்தி வரும் லோகேஷ் என்ற மருத்துவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
அரசு மருத்துவமனையில் பணியை முடித்து விட்டு தனது கிளினிக்கிற்கு வரும் மருத்துவர் லோகேஷ் அங்கு வரும் ஏழை எளிய மக்களுக்கு 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கிறார்.






