--- --:--:-- --

மத்திய அரசு கூறியபடி கணக்குகளை முடக்கிய ட்விட்டர் நிர்வாகம்..!

8

ட்டம் ஒழுங்கு பாதிப்பை தூண்டும் வகையிலான பதிவுகள் என்று அரசு சுட்டிக்காட்டிய கணக்குகளில் பெரும்பாலானவற்றை டுவிட்டர் நிறுவனம் முடக்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் ட்விட்டர் இந்தியா நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

 

பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பதிவுகள் இடப்படும் கணக்குகள் என்று 1178 கணக்குகளை ட்விட்டர் நிர்வாகத்திற்கு அரசு சுட்டிக்காட்டியிருந்தது. இந்த கணக்குகளில் காலிஸ்தான், பாகிஸ்தான் ஆதரவாளர்கள் தவறான தகவல்களையும் மோதலை தூண்டும் வகையிலான பதிவுகளை இட்டு வருவதாகவும் அரசு கூறியிருந்தது.

 

இதை தொடர்ந்து அரசு சுட்டிக்காட்டிய கணக்குகளில் 98 சதவீதத்தை டுவிட்டர் முடக்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இதுகுறித்து டுவிட்டர் இந்தியா நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை.

Leave a Reply

Right Menu Icon