கடும் பனிப்பொழிவால் பிடிமானம் இல்லாமல் நிற்கும் துணி..!
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் கடும் பனிப் பொழிவின் காரணமாக ஆடைகள் எந்தவித பிடிமானமும் இல்லாமல் நிற்கும் காட்சிகள் காண்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. அந்த நகரில் கடந்த சில நாட்களாகவே மைனஸ் 30 டிகிரி செல்சியஸ்க்கும் குறைவான தட்பவெப்ப நிலை நிலவி வருகிறது.
மேலும் சாலைகளில் சுமார் 2 அடி நீளத்தில் பனிக்கட்டிகள் உறைந்து உள்ளது. நடுங்க வைக்கும் கடும் குளிரால் அங்குள்ள பகுதியில் கொடி கட்டாமல் ஆடைகளை காய வைத்துள்ள நிலையில் அவை பிடிமானம் இல்லாமல் இருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.







