--- --:--:-- --

நீங்க அழகா இருக்கீங்க என்று நீதிபதியிடம் கூறிய குற்றவாளி..!

6

மெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தை சேர்ந்த ஒரு கொள்ளையன் யாருமில்லாத வீட்டிற்குள் நுழைந்து பொருள்களை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளதாக போலீசார் அவனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 

கைதுசெய்யப்பட்ட கொள்ளையனை காணொளி மூலம் நீதிமன்ற விசாரணைக்காக அழைத்து வரப்பட்டான். அப்போது காணொளியில் விசாரணைக்காக காத்திருந்த பெண் நீதிபதியிடம் நீங்க செம்ம அழகா இருக்கீங்க என்று ஐஸ் வைக்க முயற்சி செய்துள்ளான்.

 

இதுமட்டுமில்லாமல் பெண் நீதிபதியிடம் காதல் சொல்ல முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்துக் கொண்டிருந்த பெண் நீதிபதி குற்றவாளியை பார்த்து ஒரு அழகான சிரிப்பு சிரித்துவிட்டு நீ சொல்லும் வார்த்தைகளுக்கு மயங்குவது நான் கிடையாது இது மாதிரியான முயற்சிகள் வேறு எங்காவது செய் என்று குற்றவாளிக்கு புரியும்படி கூறினார். குற்றவாளியை சிறையில் அடைக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

 

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. வேடிக்கை என்னவென்றால் வீடியோவை பார்த்த பலரும் ஆமாம் குற்றவாளி சொன்னதுபோலவே உண்மையாக நீதிபதி மிகவும் அழகாகத் தான் இருக்கிறார் என்று கூறியுள்ளார்கள்.

Leave a Reply

Right Menu Icon