தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை ஷங்கர் இயக்குகிறார்..!
தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை ஷங்கர் இயக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தனது அடுத்த படவேலைகளில் உள்ளார்.
ஒரு சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அந்த படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். அதன் முதல்கட்டமாக சித்தார்த் பிரியா பவானி சங்கர் காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.
அதேசமயம் தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் படத்தையும் ஷங்கர் இயக்குகிறார். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என கூறப்படுகிறது.







