--- --:--:-- --

கொரொனா சிகிச்சை முடிந்து நடிகர் சூர்யா வீடு திரும்பியுள்ளார் – கார்த்திக்

18

கொரோனா சிகிச்சை முடிந்து நடிகர் சூர்யா இல்லம் திரும்பியுள்ளார் என்று நடிகர் கார்த்தி கூறுகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா கொரொனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

 

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள சூர்யா தற்போது நலமாக இருக்கிறேன் என்றும் அனைவரும் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் கூறியிருந்தார். அத்துடன் தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

 

இந்த நிலையில் இன்று சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பியுள்ளார் என்றும் சில நாட்கள் வீட்டில் தனிமைப் படுத்திக் கொள்வார் என்றும் நடிகர் கார்த்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அத்துடன் சூர்யா குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon