--- --:--:-- --

இரட்டைமடி மீன்பிடிப்பை தடைசெய்ய நடவடிக்கை எடுக்காத மீன்துறையைக்கண்டித்து பாரம்பரிய மீனவர்கள் மீன்துறை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்

9.1

இராமேஸ்வரம் பகுதியில் கடல் வளத்தை அழிக்கும்
இரட்டை மடி வைத்து மீன்பிடிப்போர் மீது நடவடிக்கை எடுக்காததுடன்.. பாரம்பரிய மீனவனுக்கு ஒரு நீதி பணம் படைத்த மீனவனுக்கு ஒரு நீதி… என பாரபட்சம் காட்டும் மீன்துறை நிர்வாகத்தை கண்டித்து, இராமேஸ்வரம் தீவு பாரம்பரிய மீனவர் சங்கங்களின் சார்பில் இன்று மீன்துறை அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.

 

ஆர்ப்பாட்டத்திற்கு  தனுஷ்கோடி பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் செ.அமுதன் தலைமை வகித்தார் ஏஐடியுசி மீனவத் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் கண். இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மீனவர் சங்கத் தலைவர் S.முருகானந்தம் மாநில குழு உறுப்பினர் பி.வடகொரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon