--- --:--:-- --

இந்த உலகத்தில் என்னைப்போல ஒரு சிறந்த நடிகை உண்டா..? சுய தம்பட்டம் அடித்த கங்கனா..!

7

ஹாலிவுட் நடிகைகளான மெரில் ஸ்ட்ரீப் மற்றும் கால்கேடட் ஆகியோருக்கு இணையாக தன்னிடம் திறமைகள் உள்ளதாக டுவிட்டரில் சுயதம்பட்டம் அடித்துள்ளார் கங்கனா ரனாவத். இதையடுத்து நெட்டிசன்கள் .பலரும் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

 

ஹிந்தி நடிகையும், மாடல் அழகியுமான கங்கனா ரனாவத் 2006ஆம் ஆண்டிலிருந்து நடித்துவருகிறார். தமிழில் தாம் தூம் திரைப்படத்தில் மட்டும் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த பிறகு காணாமல் போய்விட்டார்.

 

தற்போது தமிழக முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா குறித்து சுயசரிதை திரைப்படமான தலைவி என்னும் படத்தில் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். அத்துடன் தாக்கத் என்னும் இந்தி படத்திலும் நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில்தான் தலைவி மற்றும் தாக்கத் ஆகிய திரைப்படங்களின் போஸ்டர்களுடன் நடிப்புத் திறமையை பற்றி ஒரு நடிகையாக நான் வெளிப்படுத்தும் திறமை தற்போது உலகில் வேறு எந்த நடிகையிடமும் இல்லை. பல்வேறு விதமான நடிப்பில் மெரில் ஸ்ட்ரீப் போலவும் ஆக்ஷன் மற்றும் கவர்ச்சியில் கால்கட் போலவும் திறமையை வெளிப்படுத்துகிறேன்.

 

இந்த உலகில் என்னை விடவும், திரைப்பட உலகில் வித்தியாசமான மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தும் இன்னொரு நடிகை உண்டா அப்படிக் காட்டினால் எனது ஆணவத்தை விட்டு விடுகிறேன் என கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon