பதின்பருவத்தில் மனம் தடுமாற்றம் அடையாமல் இருந்தால் வெற்றியடையலாம்..!
பதின்பருவத்தில் மனம் தடுமாற்றம் அடையாமல் இருந்தால் அதுவே பல வெற்றிகளை கொண்டு வரும் என நடிகை கயல் ஆனந்தி தெரிவித்துள்ளார். அவரது நடிப்பில் கமலி ஃப்ரம் நடுக்காவேரி என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது.
ஒரு கிராமத்திலிருந்து வரும் பெண் தன் நிலையில் இருந்து மாறாமல் வெற்றியடையும் கதைக்களத்தை கொண்ட இந்த படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். கயல் ஆனந்தி பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
படக்குழுவினர் அனைவரும் அதில் கலந்து கொண்டனர். இந்த படம் அனைவருக்கும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இருக்கும் என கயல் ஆனந்தி தெரிவித்துள்ளார்.







