--- --:--:-- --

கொரொனா பாதித்தவர்களை கண்டறியும் நாய்..!

10

கொரொனா பாதித்தவர்களை கண்டறிவதற்காக 3 நாய்களுக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளித்து வருகிறது. கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் அனைத்து மக்களையும் நிலைகுலையச் செய்தது.

 

கொரொனா பாதித்தவர்களை கண்டறிய பி‌சி‌ஆர் டெஸ்ட் சோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ வழிமுறைகள் இருந்தாலும் நாயின் மோப்ப சக்தி மூலம் கண்டறிய முடியுமா என சோதனை நடத்தப்பட்டது. இதற்காக பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா ,பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

இதேபோல் இந்திய ராணுவம் காஷ்பர் என்ற காக்ரச் பேணியல் வகை நாய்க்கும், ஜெயா, மணி என்ற இரு சிப்பி பாறைவகை நாய்க்கும் பயிற்சி அளித்தது.டெல்லியில் நடைபெற்ற பயிற்சியில் மூன்று நாய்களும் கொரொனா பாதித்தவர் உடைகளை சரியாக கண்டுபிடித்து ஆச்சரியப்படுத்தின. கொரொனாபாதித்தவரின் வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் நாய் கொரொனா பாதிப்பை கண்டறிவது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon