--- --:--:-- --

மங்களூர்- சென்னை விரைவு ரயிலை மீண்டும் இயக்க கோரிக்கை..!

9

குளித்தலை வழியே இயக்கப்படும் மங்களூர்- சென்னை விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பெரம்பலூர் எம்‌பி பாரிவேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில் கொரொனா காரணமாக நிறுத்தப்பட்ட சென்னை மங்களூர் ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

 

மேலும் மைசூர், மயிலாடுதுறை மன்னார்குடி ஆகிய ரயில்களை குளித்தலை ரயில் நிலையத்தில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் குளித்தலை ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான மின்னணு அறிவிப்பு பலகைகள் நிறுவ வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon