--- --:--:-- --

குடிபோதையில் அதிவேகமாக ஓட்டிச் சென்ற கார் மின்மாற்றியில் மோதி விபத்து..!

11

ஈரோடு மாவட்டம் பவானி அருகே குடிபோதையில் அதிவேகமாக ஓட்டிச் சென்று தாக கூறப்படும் கார் மின்மாற்றியில் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

பவானியை சேர்ந்த சரவணகுமார் என்பவர் கடந்த ஞாயிறு அன்று மாலை தனது காரில் நண்பர்கள் மூன்று பேருடன் பவானி நோக்கி சென்று கொண்டிருந்தார். கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதி பின்னர் அங்கிருந்த மின்மாற்றியின் மீது தீப்பொறி ஏற்பட்டு மோதி நின்றது.

 

மோதிய வேகத்தில் அந்த பகுதியில் மின்சாரம் தடைபட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சரவணகுமார் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.

 

இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் காரில் வந்தவர்கள் அனைவரும் லேசான காயங்களுடன் தப்பினார். சரவணகுமார் குடிபோதையில் காரை ஓட்டி வந்ததாக கூறப்படும் இடத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon