--- --:--:-- --

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியும் இணைக்கப்பட வேண்டும்..!

6

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியும் இணைக்கப்பட வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா மாநிலங்களவையில் கோரிக்கை விடுத்தார்.

 

தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழ் ஆசிரியர் கூட இல்லை எனவும் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகள் திணிக்கப்படுவதாகவும் மாநிலங்களவையில் குறிப்பிட்டார்.

 

சமஸ்கிருதம் மொழியில் தேர்வு எழுதியவர்கள் மட்டும்தான் ஆறாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்பிற்கு தேர்ச்சி அடைய முடியும் என்பது உள்ளூர் மாணவர்களுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம் என பேசிய திருச்சி சிவா தமிழகத்தின் நலன் சார்ந்தது மட்டுமல்லாமல் ஒரு பொதுப் பிரச்சனையாக இருப்பதால் இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டுவர கடமைப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

மத்திய அரசின் இத்தகைய முடிவுகள் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என பேசிய திருச்சி சிவா கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியும் இணைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon