விமான நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்து விடுவேன் என மிரட்டல் விடுத்த பெண்..!
திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்து தகர்த்து விடுவேன் என போனில் மிரட்டல் விடுத்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. காலை 8 மணியளவில் இருநூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தில் விமானத்திற்காக காத்திருந்தனர்.
அப்போது விமான நிலைய அதிகாரியை தொடர்பு கொண்ட ஒரு பெண் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத விஷயங்களைப் பேசி அதிகாரியை குழப்பி யுள்ளார். ஒருகட்டத்தில் விமான நிலையத்தில் வெடிகுண்டு போட்டு எல்லோரையும் தூக்கி விடுவேன் என மிரட்டியுள்ளார்.
அந்த பெண் இந்த மிரட்டல் பேச்சு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலாரம் அடிக்க செய்து உள்ளே இருந்த பயணிகளின் பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர். மோப்பநாய் உதவியுடன் விமான நிலையத்தை அங்குலம் அங்குலமாக சோதனையிட்டுள்ளனர்.
மனநோயாளியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






