மகளின் கருவை கலைக்க உதவிய தாய் உள்ளிட்ட 4 பேர் கைது..!
சேலம் ஆத்தூர் அருகே மகளின் கருவை கலைக்க உடந்தையாக இருந்த தாய் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மல்லியகரை பகுதியை சேர்ந்த அருண் – சரண்யா தம்பதியினருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தை உள்ள நிலையில் மீண்டும் கருவுற்ற சரண்யா கோபாலபுரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் அறிமுகப்படுத்திய சிலரின் உதவியோடு கருவில் இருப்பது பெண் குழந்தை என்பதை அறிந்து சரண்யாவின் தாய் கருவை கலைக்க முடிவு செய்துள்ளார். இதையடுத்து ஆத்தூரை சேர்ந்த பூமணி என்பவரது வீட்டில் வைத்து சரண்யாவிற்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது.
அப்போது சரண்யாவின் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கருக்கலைப்பு குறித்து பெத்தநாயக்கன்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் அளித்த புகாரின் பேரில் விசாரித்த காவல்துறை சரண்யாவின் தாய், பூங்கொடி அலமேலு, சின்ராசு, சீதாதேவி ஆகியோரை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.






