--- --:--:-- --

மருத்துவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ்..! காரில் அதிமுக கொடி..!

3

பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். பத்து நாட்களுக்கும் மேலாக கொரொனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

 

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் சில நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, ரத்தத்தில் ஆக்சிஜன் செரிவு சீராகியுள்ளது.

 

டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து சசிகலா வெளியே அழைத்து வரப்பட்டார் . சசிகலா செல்லும் காரில் அதிமுகவின் கொடி இருந்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon