--- --:--:-- --

கிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டையடித்து நேர்த்திக்கடன்..! குவிந்த ரசிகர்கள்..!

3

ந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பழனி முருகன் கோவிலில் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தி உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று இந்தியாவிற்கு ஆதரவாக அபாரமாக விளையாடிய கிரிக்கெட் வீரர் நடராஜன் இன்று பழனி கோவிலுக்கு வந்துள்ளார்.

 

பழனி அடிவாரத்தில் உள்ள முடி கொட்டகையில் மொட்டையடித்து ரோப்கார் வழியாக மலைக்கோவிலுக்கு மேலே சென்று அவர் சாமி தரிசனம் செய்தார். நடராஜன் பழனி கோவிலுக்கு வந்த தகவல் அறிந்து ஏராளமானோர் அவரை காண குவிந்தனர்.

 

செல்பி எடுத்துக்கொள்ள முட்டி மோதியதால் அங்கிருந்து வெளியே வர முடியாமல் திணறிய நடராஜன் அவரது நண்பர்கள் பாதுகாப்பாக காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

Leave a Reply

Right Menu Icon