--- --:--:-- --

9 நாட்கள் பேறுகால விடுப்பு வேண்டி நாடாளுமன்ற உறுப்பினர் எழுதியுள்ள கடிதம்..!

4

நெருக்கடியான சூழலில் நாடாளுமன்றம் தொடங்கியிருக்கும் நிலையில் 9 நாட்கள் பேறுகால விடுப்பு வேண்டி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதி இருப்பது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

பட்ஜெட் கூட்டத் தொடர் பரபரப்பாக தொடங்கி இருக்கக்கூடிய நிலையில் அடுத்தடுத்து வரும் நாட்கள் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பேறுகால விடுப்பு கேட்டு தெலுங்கு தேசம் கட்சியின் ஸ்ரீகாகுளம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராம்மோகன் நாயுடு மக்களவை சபாநாயகருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

 

சில நாட்களில் தனது மனைவி குழந்தை பெற இருப்பதாகவும் இந்த தாய்மையை காலத்தில் அவருடன் இருக்க தான் விரும்புவதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

குழந்தை வளர்ப்பில் தாய்க்கு மட்டுமல்ல தந்தைக்கும் சம பங்கு உள்ளது என்பதால் தயவுகூர்ந்து தனக்கு பிப்ரவரி 10ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு பேறுகால விடுமுறை வழங்கும் படி கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon