இந்தியாவில் 51 சீன செயலிகளுக்கு நிரந்தரமாக தடை..!
இந்தியாவில் 51 சீன இணையதளங்களுக்கு நிரந்தரமாக தடை விதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. டிக் டாக், ஷேர் இட், எம்ஐ வீடியோ கால் போன்ற செயலிகள் இதில் அடங்கும். ஏற்கனவே மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 267 சீன செயலிகள் மீது நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்த நிலையில் அதில் தற்போது 59 சீன செயலிகளுக்கு நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் ஒலிபரப்புத் துறை தெரிவித்துள்ளது.







