--- --:--:-- --

இவர் தான் தன் குழந்தைக்கு அப்பா என அப்பாவி நபரை கைகாட்டிய பெண்..!

2

காராஷ்டிராமாநிலம் மும்பையில் உள்ள சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியில் சிறுமி ஒருவர் படித்து வந்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதியன்று வயிறு வலிப்பதாக சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

 

இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தபோது பக்கத்து வீட்டை சேர்ந்த நபர் தன்னை இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

 

கடந்த 15 மாதங்களாக சிறையில் இருந்த நிலையில் தற்போது எடுக்கப்பட்டுள்ள பரிசோதனையில் சிறுமியின் குழந்தைக்கு அவர் தந்தை இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon