--- --:--:-- --

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு..!

13

லங்கை கிழக்கில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காலை நேரங்களில் லேசான பணி மூட்டம் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon