ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது..!
சமூக வலை தளங்களான ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகியவற்றுக்கு மத்திய தொழில் நுட்பத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன் அனுப்பியுள்ளது.
சமூக வலைதள செய்திகளை தவறாக பயன்படுத்துவதை தடுப்பது மற்றும் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக ஆலோசிப்பதற்காக இந்தசம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தரவுகளின் பாதுகாப்பு குறித்த சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 21 ஆம் தேதி நாடாளுமன்ற நிலைக்குழு முன்பாக பேஸ்புக் ட்விட்டர் நிர்வாகிகள் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.







