இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம்..!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சாலையில் சென்ற இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்துள்ளது.
இங்குள்ள மரவ பட்டியை சேர்ந்த 22 வயது இளைஞர் பெட்ரிக் என்பவர் தனியார் நூற்பாலையில் வேலை செய்யும் தனது தந்தையை அழைத்து வர யமஹா எஃப் சி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கரியபட்டி எந்த இடத்தில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் தீப்பற்றியுள்ளது.
மோட்டார் சைக்கிள் தீ பிடித்ததும் உடனடியாக கீழே இறங்கிய தால் உயிர் தப்பியுள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து பணியாளர்கள் தீயை அணைக்க உதவியுள்ளனர்.







