--- --:--:-- --

கமலாஹாரிசை கிண்டலடித்த டிரம்ப் மீதான கண்டன தீர்மான விசாரணை..!

3

மெரிக்க அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இருந்து கமலா ஹாரிஸ் விலகிய போது அவரை கிண்டலடித்த டிரம்ப் மீதான கண்டன தீர்மானம் விசாரணை கமலா ஹாரிஸ் தலைமையில் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.

 

2019ஆம் ஆண்டு டிசம்பரில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இருந்து விலகிய போது அவரை கிண்டலடிக்கும் விதமாக வி வில் மிஸ் யூ என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

 

கவலைப்படாதீர்கள் கண்டன தீர்மானத்தில் சந்திக்கலாம் என அப்போது கமலா ஹாரிஸ் பதிலடி கொடுத்திருந்தார்.அது தற்போது உண்மையாகியுள்ளது.

 

அமெரிக்க துணை அதிபராகப் பொறுப்பேற்க உள்ள கமலா ஹாரிஸ் செனட் சபை தலைவர் என்ற முறையில் மீதான கண்டன தீர்மானம் விசாரணைக்கு தலைமை தாங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon