கோட்சேவை தேசபக்தர் எனக் கூறிய பாஜக பெண் எம்பி..!
மகாத்மா காந்தியை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை தேசபக்தர் எனக் கூறி பாஜக பெண் எம்பியும், துறவியுமான பிரக்யா சிங் தாக்கூர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மத்திய பிரதேசம் குவாலியரில் கோட்சே பெயரில் நூலகம் திறக்கப்பட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங் சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதியான கோட்சே பெயரில் நூலகம் அமைத்து அதற்கு கண்டனம் தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பெண் சாமியாரும் பாஜக எம்பியுமான பிரக்யாசிங் நாதுராம் கோட்சேவை பயங்கரவாதி எனக் கூறுவதன் மூலம் காங்கிரஸ் தேசபக்தர்கள் மீது தொடர்ச்சியாக அவதூறு பரப்பி வருவதாக கூறினார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.






