--- --:--:-- --

போட்டோ எடுக்க வேணாம்னு பாகனிடம் முறையிடும் யானை..!

6

ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாள் புகைப்படம் எடுப்பதால் கூச்சம் கொண்டு புகார் தெரிவித்த காட்சிகள் வெளியாகியுள்ளன. ரங்கநாதர் கோவில் யானையான ஆண்டாள் அதன் பாகனுடன் நெருக்கமாக நட்பு பாராட்டி வருகிறது.

 

இந்த நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிலர் செல்போனில் படம் எடுப்பதை கண்ட யானை கூச்சத்துடன் முறையிட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. புகைப்படம் எடுக்கிறார்ள்களா என்று கேட்க ஆமாம் என்பது போல ஆண்டாள் குரல் எழுப்புகிறது.

 

யானையை மெல்ல சமாதானப்படுத்தும் பாகன் புகைப்படம் எடுக்க அனுமதிக்கலாமா எனக்கேட்க பிறகு குழந்தை போல தலையாட்டி சம்மதிக்கிறது ஆண்டாள். பிரம்மாண்ட குழந்தையை போல் இருக்கும் யானையின் பாகன் உடன் அது காட்டும் அன்பும் பார்ப்போரை நிகழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

Leave a Reply

Right Menu Icon