கல்லூரி மாணவ மாணவிகளுக்கு 2 ஜிபி டேட்டா இலவசம்..!
இணைய வழிக் கல்விக்காக கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தினசரி 2 ஜிபி டேட்டா இலவசம் என தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பின்படி தமிழகத்தில் கொரொனா வைரஸ் தொற்று காரணமாக கல்லூரி மூடப்பட்டுள்ள நிலையில் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக கல்வி நிறுவனங்கள் இணைய வழிக் கல்வியை நடத்தி வருகின்றனர்.
எனவே இணைய வழி வகுப்புகளுக்கு மாணவர்கள் கலந்து கொள்ள ஏதுவாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் 9 லட்சத்து 69 ஆயிரத்து 47 மாணவர்களுக்கு 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை நான்கு மாதங்களுக்கு 2ஜிபி தரப்படும் என கூறப்பட்டுள்ளது.






