--- --:--:-- --

ராணிப்பேட்டையில் இளைஞரை குத்திக்கொலை செய்த காதலியின் அத்தை மகன்..!

12

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே காதலால் ஏற்பட்ட முன்விரோதத்தில் இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த காதலியின் அத்தை மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

 

முப்பதுவெட்டி பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த சூர்யா என்பவரும் அதே பகுதியை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவியும் காதலித்து வந்துள்ளனர். கடந்த வாரம் பெண் வீட்டாருக்கு தெரிந்ததும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் உறவினர்கள் சூர்யாவின் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

 

தகறாரின் போது அந்த பெண்ணின் அத்தை மகனான அஜயை சூர்யா தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை அங்குள்ள ஏரிக்கரை அருகே இயற்கை உபாதை கழிக்க சென்ற சூர்யாவை வழிமறித்த அஜயை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon