சுவாசக்குழாயில் நிலக்கடலை சிக்கி உயிருக்கு போராடிய ஒன்றரை வயது குழந்தை..!
சேலத்தில் சுவாசக்குழாயில் நிலக்கடலை சிக்கி உயிருக்கு போராடிய ஒன்றரை வயது குழந்தை மருத்துவர்களின் 6 மணி நேர போராட்டத்திற்கு பின் காப்பாற்றப்பட்டது.
சோழ மண்டலத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரது ஒன்றரை வயது ஆண் குழந்தையை பிரதீப் இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது கீழே கிடந்த நிலக்கடலையை எடுத்து விழுங்கியதாக சொல்லப்படுகிறது.
மூச்சுவிட முடியாமல் குழந்தை அழுது கொண்டிருந்த நிலையில் பெற்றோர் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு குழந்தையை அதிநவீன கருவிகள் மூலம் பரிசோதித்த போது குழந்தையின் சுவாச குழாய் நிலக்கடலை சிக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து 6 மணி நேரம் போராடிய மருத்துவர்கள் குழந்தையின் சுவாச குழாயில் இருந்து நிலக்கடலை அகற்றப்பட்டது. குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.







