உணவகம் ஒன்றில் தயாரிக்கப்பட்டுள்ள 24 கேரட் தங்கத்திலான பர்கர்..!
அமெரிக்காவின் கொலம்பியா மாகாணத்தில் உணவகம் ஒன்றில் தயாரிக்கப்பட்டுள்ள 24 கேரட் தங்கத்திலான பர்கர் உணவுப் பிரியர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. பிரபல உணவகம் இந்த பர்கரை அறிமுகப்படுத்தியுள்ளது.
வழக்கமான இறைச்சி பர்கரின் மேற்பகுதியில் 24 கேரட் தங்க மூலாம் பூசப்பட்டு இருப்பதே இதன் தனி சிறப்பாகும். அந்த உணவகம் சார்பில் சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்ட அந்த பர்கரின் வீடியோக்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன. இந்த பர்கரின் விலை இந்திய மதிப்பில் நான்காயிரத்து 500 ரூபாய் ஆகும்.






