--- --:--:-- --

முதியோர்களுக்கு உதவும் அரசுப்பள்ளி ஆசிரியை..!

6

நாகை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு தன் சொந்த செலவில் பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகிறார்.

 

வேதாரண்யம் அருகே உள்ள கிராமத்தில் உள்ள ஞானாம்பிகா அரசு உதவி தொடக்க பள்ளி ஆசிரியை வசந்தா பள்ளி மாணவர்கள் மற்றும் முதியோர்களுக்கு ஏற்கனவே இலவசமாக குடைகளை வழங்கியுள்ளார். ஆதரவற்றோர் முதியோருக்கு உணவு சமைத்து தொடர்ந்து வழங்கி வருகிறார்.

 

இவருக்கு தமிழக அரசு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது உடன் சமூக சேவையை பாராட்டி பல்வேறு அமைப்புகள் விருதுகள் வழங்கி கௌரவித்து உள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon