--- --:--:-- --

வீட்டில் வேலை செய்த பெண் திடீரென வேலையை விட்டு நின்றதால் உரிமையாளர் ஆத்திரம்..!

13

சென்னை மயிலாப்பூரில் தனது வீட்டில் வேலை செய்த பெண் திடீரென வேலையை விட்டு நின்று மற்றொரு வீட்டிற்கு வேலை செய்யச் சென்றதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கிய வீட்டு உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

 

மைலாப்பூர் தேசிகா சாலையில் வசித்து வரும் ரவி கணேசன் என்பவரது வீட்டில் வந்து சேர்ந்த வீணா என்ற பெண் வேலை பார்த்து வந்துள்ளார். தனது சொந்த காரணங்களுக்காக வேலையை விட்டு நிறுத்திவிட்டு சிறிது நாட்கள் கழித்து மற்றொரு வீட்டிற்கு சென்றுள்ளார்.

 

இதனால் ஆத்திரமடைந்த அவர் அந்த பக்கம் வரக்கூடாது என்று கூறியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படியாக பணிக்கு சென்ற வீணாவை வழிமறித்த ரவி கணேஷ் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon