--- --:--:-- --

பொங்கல் பரிசுத்தொகையை பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் விநியோகம்..!

1

பொங்கல் தொகுப்பு மற்றும் 2,500 ரூபாய் பரிசுத்தொகையை பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை வினியோகிக்கப்படுகிறது.

 

பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய கும்பல் தொகுப்புடன் 2,500 ரூபாய் பரிசு தொகை வழங்கப்படுகிறது.

 

இதுதொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் பொங்கல் தொகுப்பு மற்றும் 2,500 ரூபாய் பரிசுத்தொகையை பெற இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை டோக்கன் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வீடுதோறும் சென்று நியாய விலைக்கடை பணியாளர்கள் மூலம் டோக்கன் வழங்கப்பட வேண்டும் என்றும் ஒரு கடையில் முற்பகுதியில் 100 பேருக்கும், பிற்பகுதியில் 100 பேருக்கும் பொங்கல் தொகுப்பு பரிசுத்தொகை வினியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

குறிப்பிட்ட நாளில் வாங்க இயலாத குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜனவரி 13-ஆம் தேதிக்குள் பொங்கல் தொகுப்பு பரிசு தொகை வழங்கப்பட வேண்டும். இவை இரண்டும் ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon