--- --:--:-- --

15 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரியவகை வெளிநாட்டு ஆமை திருட்டு..!

12

சென்னை அருகே முதலை பண்ணையில் பராமரிக்கப்பட்டு வந்த 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரியவகை வெளிநாட்டு ஆமை திருடு போயிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து சென்னை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் முதலைப்பண்ணை கடந்த 1976 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

 

இந்தப் பண்ணையில் 25 வகை முதலைகள், ஆமைகள், பாம்புகள் வித்தியாசமான பல்லிகள் உள்ளிட்ட 35 வகையான ஊர்ந்து செல்லும் உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் திங்கள்கிழமை தவிர மற்ற நாட்களில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

 

ஆமையின் மதிப்பு 15 லட்சம் ரூபாய் ஆகும். கடந்த மாதம் 11ஆம் தேதி பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த ஒரு பெண் ஆமை திடீரென காணாமல் போயுள்ளது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் பராமரிப்பாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் மாமல்லபுரம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

 

கம்பியிலிருந்து ஆமை வெளியில் செல்ல வாய்ப்பில்லை என்றும் இதன் மதிப்பை அறிந்து யாரோ சிலர் ஆமையை திருடிச் சென்றிருக்கலாம் என்றும் பண்ணை பராமரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Right Menu Icon