ஆறாயிரம் ரூபாயில் மதுரையை ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்க்கலாம்..!
ஆறாயிரம் ரூபாயில் மதுரையை ஹெலிகாப்டரில் சுற்றிப்பார்க்க தனியார் நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலூர் தெற்கு தெருவில் உள்ள வைகை இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் பிளானாட்டிக்ஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்து இந்த ஏற்பாடுகளை செய்துள்ளனர். 6 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் நபர் ஒன்றுக்கு 6,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
மேலூரில் இருந்து தொடங்கும் இந்த பயணம் ஒத்தக்கடை, யானைமலை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், கள்ளழகர் கோவில் உள்ளிட்ட இடங்களில் சுற்றிய பிறகு மீண்டும் மேலூரை வந்தடைகிறது.






