மக்களுடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்ட முதல்வர்..!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமது தேர்தல் பரப்புரையின் போது மக்களுடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டார். எடப்பாடி தொகுதிக்குட்பட்ட பெரிய சோரகை, வனவாசி, ஜலகண்டபுரம் உள்ளிட்ட இடங்களில் திறந்தவெளி வாகனத்தில் சென்றவாறு அவர் பரப்புரை மேற்கொண்டார்.
ஒரு சில இடங்களில் சாலைகளில் நடந்து சென்றார். அப்போது தொண்டர்கள் இளைஞர்கள் உள்ளிட்டோர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர்களுடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டார். தொண்டர்கள் பலரும் செல்பி எடுத்து வைத்துள்ளனர்.







