ரயில் நிலையத்தில் பிரபோஸ் செய்த காதலன்..!
அயர்லாந்தின் பியர்ஸ் ரயில் நிலையத்தில் காதலன் ஒருவர் தனது காதலை ப்ரப்போஸ் செய்த விதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பூவுலா என்ற பெயரில் அயர்லாந்தின் ரயில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அப்போது ரயில் பியர்ஸ் என்ற ரயில் நிலையத்திற்கு வந்து உள்ளது.
அங்கு அவரது ஆண் நண்பரான சுலிவான் என்பவர் கையில் பூங்கொத்துடன் வில் யு மேரி மீ என்ற பதாகையுடன் காத்துக் கொண்டிருந்துள்ளார். ரயிலிலிருந்து சுலிவானை பார்த்ததும் ஒருவிதமான அதிர்ச்சியில் உறைந்து போனார். ரயில் நின்றவுடன் இறங்கி வந்தார்.
அவர் உடனே அவரிடம் பூங்கொத்துகளை கொடுத்து தனது காதலை வெளிப்படுத்தினார். அதற்கு அந்த பெண் சம்மதிக்க ரயில் நிலையமே விழாக்கோலம் பூண்டது. அங்கே நின்று கொண்டிருந்த பயணிகள் கைகளைத் தட்டி அவர்களை வாழ்த்து மழையில் நனைத்தனர்.
காதலை வெளிப்படுத்திய விதம் நெகிழ்ச்சியடைய செய்வதாகவும் தெரிவித்துள்ளார். விரைவில் திருமணம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.







