பதவிக்காக பணம் பெற்றால் கட்சியிலிருந்து நீக்கப்படுவீர்கள்- ரஜினிகாந்த் எச்சரிக்கை
மக்கள் மன்ற நிர்வாகிகளை நியமிக்கும் போது பதவிக்காக பணம் பெற்றால் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு எடுத்து ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்து அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறார்.
டிசம்பர் 31 ஆம் தேதி கட்சி தொடங்கும் தேதி, கட்சி பெயர், சின்னம் குறித்து அறிவிப்பார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் மன்ற நிர்வாகிகள் டிசம்பர் 25ம் பூத் கமிட்டி உறுப்பினர் பட்டியலை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க ரஜினி மக்கள் மன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் ரஜினி மக்கள் மன்றம் மாவட்ட செயலாளர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் மக்கள் மன்ற நிர்வாகிகளை நியமிக்கும் போது பதவிக்காக பணம் பெற்றால் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என்று பூத் கமிட்டி போன்றவற்றிற்கு நிர்வாகிகள் நியமிக்கும் போது பணம் பெறக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதி, மதம் பார்க்காமல் அனைவரையும் பூத் கமிட்டியில் நியமிக்க வேண்டுமென்றும் மன்ற நிர்வாகிகள் டிசம்பர் 25ஆம் தேதிக்குள் பூத் கமிட்டி உறுப்பினர் பட்டியலை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ரஜினி கட்சியினர் ஓட்டுக்கு பணம் கொடுக்கக் கூடாது போன்ற அறிவுறுத்தல்களை மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.







