நடு ரோட்டில் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்.!
சென்னை புதுப்பேட்டையில் இளைஞர் ஒருவரை மற்றொருவர் துடிக்கத் துடிக்க கழுத்தை அறுத்து கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கண்ணகி நகரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் நேற்று முன்தினம் புதுப்பேட்டையில் உள்ள இரவு கடையில் கூலி வேலை செய்து விட்டு அங்குள்ள நடைமேடையில் உறங்க சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சந்தோஷை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிச் சென்றனர். அதில் ஒருவன் தான் வைத்திருந்த கூர்மையான பொருளால் கழுத்தை அறுக்கும் காட்சியும் அருகிலிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
படுகொலை தொடர்பாக இளவரசன் மற்றும் வரும் என்கிற அருணாச்சலம் ஆகியோரை எழும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.






