ஜனவரி 4ஆம் தேதி முதல் 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பு..!
புதுச்சேரியில் ஜனவரி 4ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகிறது. புதுச்சேரியில் கொரொனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் ஜனவரி 4-ஆம் தேதி ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது என கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார்.
பள்ளிகள் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை செயல்படும் என்றும் பின்பு 14 நாட்கள் கழித்து பள்ளிக்கூடம் முழு நேரம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






