இளைஞர்களிடம் முகநூலில் பழகி பணம் பறித்த பெண்..!
ராமநாதபுரம் இளைஞர்களிடம் முகநூலில் பழகி மூன்று லட்ச ரூபாய் பணம் பறித்த பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் இரட்டை ஊரணி பகுதியைச் சேர்ந்த சிவகிரி குவைத் நாட்டில் தங்கி வேலை செய்து வருகிறார்.
அமெரிக்காவில் வசிக்கும் கிளாரா என்ற பெண் ஒருவருடன் சிவகிரிக்கு முகநூல் மூலமாக அறிமுகம் கிடைத்து உள்ளது. ஆரம்பத்தில் கருத்துகளைப் பரிமாறிக் கொண்ட இருவரும் நாளடைவில் நெருங்கி பழகியுள்ளனர்.
உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தந்தை சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறிய கிளாரா சிகிச்சைக்கு பண உதவி கேட்டுள்ளார். அதை நம்பியே சிவஹரி 4 தவணைகளாக சுமார் மூன்றரை லட்சம் ரூபாயை அந்தப்பெண்ணின் வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்துள்ளார்.
பணத்தை வாங்கிய அவர் தனது முகநூல் கணக்கை முடக்கி அவருடனான தொடர்பை துண்டித்து உள்ளார் .அது தொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் இ-மெயில் மூலமாக அளித்த புகாரை அடுத்து சிவகரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து இருக்கும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







