தூத்துக்குடியில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள துருக்கி நாட்டு கரன்சி..!5 பேர் கைது..!
தூத்துக்குடியில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள துருக்கி நாட்டு கரன்சிகளோடு சுற்றித்திரிந்து 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றிய 5 பேரை பிடித்து விசாரித்துள்ளனர். அவர்களிடம் நடத்திய சோதனையில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நாட்டு கரன்சி நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கோயம்புத்தூரை சேர்ந்த ஜீவா கடையநல்லூரில் வசிக்கும் முகமது உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த 2006 ஆம் ஆண்டு துருக்கியில் இந்த கரன்சி நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.







