பொங்கல் பண்டிகைக்காக அரசு பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு..!
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக அரசு பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு தொடங்குகிறது. ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக அரசு பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு தொடங்குகிறது. தற்போது கொரொனா காரணமாக 800 அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
பொங்கல் பண்டிகைக்கு கூடுதலான பயணிகள் செல்வர் என்பதால் தேவைக்கேற்ப கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.







