--- --:--:-- --

திருப்பதி லட்டுகள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என விளம்பரம் செய்த போலி இணையதளம்..!

1

திருப்பதி லட்டுகள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என்று விளம்பரம் செய்த இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இது போன்ற இணையதளங்களை நம்ப வேண்டாம் என்று தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

திருப்பதி கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தை வீடுகளுக்கே சென்று வினியோகம் செய்வதாக பாலாஜி பிரசாதம் டாட் காம் என்ற இணையதளத்தில் விளம்பரம் வெளியானது.

 

அதில் ஒரு வீட்டிற்கு கொண்டு வர 500 ரூபாய் என்றும், 5,000 ரூபாய் செலுத்தினால் ஒவ்வொரு வாரமும் இரண்டு லட்டுகள் அனுப்பி வைக்கப்படும் எனவும் விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது.

 

இந்த நிலையில் அந்த இணையதளம் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி வலியுறுத்தி வந்தார். இதையடுத்து பாலாஜி பிரசாதம் டாட் காம் என்ற முகவரியில் இயங்கி வந்த போலி இணையதளம் தற்போது முடக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon